MARC காட்சி

Back
இராயபுரம் ஹசரத் குணங்குடி மஸ்தான் சாகிப் தர்கா
245 : _ _ |a இராயபுரம் ஹசரத் குணங்குடி மஸ்தான் சாகிப் தர்கா -
520 : _ _ |a பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இசுலாமியத் துறவி குணங்குடி மஸ்தான் சாகிபு என்பவர் ஆவார். குணங்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி அருகில் அமைந்துள்ள குணங்குடி அவரது பிறந்த இடம் ஆகும். அவர் சென்னை "லெப்பை காடு" என்ற இடத்தில் தவம் செய்தார். உள்ளூர் வாசிகள் "தொண்டி ஆவர் நாயகன்" என்ற பொருள் பட, அவரை "தொண்டியார்" அழைத்தனர். பின்னர், லெப்பை காடு தொண்டியார்பேட்டை எனப்பட்டது. தொண்டியார்பேட்டை அருகில் ராயபுரம் அமைந்துள்ளது. ஹசரத் குணங்குடி மஸ்தான் சாஹிப் தர்காவில் எல்லா நம்பிக்கை கொண்ட அனைத்து மக்களும் செல்கின்றனர்.
653 : _ _ |a இசுலாம், இஸ்லாம், இசுலாமியம், மசூதி, பள்ளி, பள்ளிவாசல், தர்கா, தர்ஹா, இராயபுரம் தர்கா, தொண்டியார்பேட்டை, குணங்குடி மஸ்தான், ஹசரத் குணங்குடி மஸ்தான் சாகிபு தர்கா, இசுலாமியத் தலங்கள், வழிபாட்டுத்தலம், வடசென்னை தர்கா, சென்னை தர்கா, சித்தர் குணங்குடி மஸ்தான்
700 : _ _ |a திரு.வேலுதரன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.1838
909 : _ _ |a 8
910 : _ _ |a 182 ஆண்டுகள் பழமையானது. இந்துக்களும் வழிபடும் தர்கா.
914 : _ _ |a 13.109645
915 : _ _ |a 80.289306
925 : _ _ |a ஐந்து காலத் தொழுகை
926 : _ _ |a ரமலான், பக்ரீத், மிலாடி நபி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a இல்லை
930 : _ _ |a குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இஸ்லாமிய சமயத்தைக் குறித்தும், இறைவனைக் குறித்தும் இவர் இயற்றிய தமிழ் இலக்கியங்கள் புகழ் பெற்றவை ஆகும் இல்வாழ்க்கையைத் துறந்து துறவியாக வாழ்ந்த இவரைத் தமிழ் சித்த மரபினரில் ஒருவராகவும் மக்கள் போற்றுகிறார்கள். வடசென்னையில் இராயபுரத்தில் பாவாலெப்பை என்ற இஸ்லாமியருக்குச் சொந்தமான லெப்பைக் காடு என்ற பகுதியில் தங்கினார். முட்புதர்களும், சப்பாத்திக் கள்ளியும் அடர்ந்த குப்பைமேட்டில் தவவாழ்க்கை மேற்கொண்டார். இயற்கையைக் கடந்த சக்திகள் பெற்று சித்தர்களின் வழியில் “சித்துக்கள்” என்னும் அற்புதங்களையும் புரிந்தார். பாவாலெப்பை இவருடைய சித்துக்களின் மகிமையை உணர்ந்து அந்த இடத்தில் இவருக்கு யோக ஆஸ்ரமம் ஒன்றை அமைத்துள்ளார். இப்பகுதியில் இருந்தபோது பொதுமக்கள் கண்களிலும் தென்படாமல் மறைந்து அமர்ந்து யோகத்தில் திளைத்தார். இவர் புரிந்த அற்புதச் சித்துக்களை எல்லாம் கண்ணுற்ற பொதுமக்கள் இவரை “மஸ்தான்” என்று அழைத்தனர். பிற்காலத்தில் குணங்குடியைச் சேர்ந்தவர் என்ற பொருளில் “குணங்குடி மஸ்தான்” என்ற பெயரே நிலைத்துவிட்டது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டிப் பகுதியைச் சேர்ந்தவர் ஆதலால் இவரைத் “தொண்டியார்” என்றும் அழைத்தனர். பிற்காலத்தில் இவர் வாழ்ந்த பகுதி “தொண்டியார்பேட்டை” என்று பெயர் பெற்றது. இப்பகுதியே இன்று வடசென்னையின் புறநகர்ப் பகுதியான தண்டையார்பேட்டை ஆகும். ஹசரத் குணங்குடி மஸ்தான் சாகிபு கி.பி. 1838 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1254, ஜமாதுல் அவ்வல் 14ம் நாள் திங்கட்கிழமை வைகறை நேரம்) தன்னுடைய நாற்பத்து ஏழாம் வயதில் இறந்தார். அவர் நல்லடக்கமான புனித இடமே ஹசரத் குணங்குடி மஸ்தான் சாகிபு தர்கா என்று மக்களால் வழிபடப்பட்டு வருகின்றது.
932 : _ _ |a தர்காவின் மையப்பகுதியில் குணங்குடி மஸ்தான் சாகிபின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட சமாதி காணப்படுகின்றது.
933 : _ _ |a இராயபுரம் தர்கா கமிட்டி
934 : _ _ |a திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், பட்டினத்தார் சமாதி
935 : _ _ |a சென்னை மாநகரத்தில் அமைந்திருக்கும் வடசென்னைப்பகுதிகளுள் ஒன்றான இராயபுரத்தில் இந்த தர்கா அமைந்துள்ளது. இராயபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து பிச்சாண்டி சந்து என்று கேட்டு சென்றால் குணங்குடி மஸ்தான் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை
937 : _ _ |a இராயபுரம்
938 : _ _ |a இராயபுரம்
939 : _ _ |a சென்னை மீனம்பாக்கம்
940 : _ _ |a சென்னை மாநகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000343
barcode : TVA_TEM_000343
book category : இசுலாம்
cover images TVA_TEM_000343/TVA_TEM_000343_சென்னை_இராயபுரம்_ஹசரத்-குணங்குடி-மஸ்தான்-சாகிப்_தர்கா-0002.jpg :
Primary File :

TVA_TEM_000343/TVA_TEM_000343_சென்னை_இராயபுரம்_ஹசரத்-குணங்குடி-மஸ்தான்-சாகிப்_தர்கா-0001.jpg

TVA_TEM_000343/TVA_TEM_000343_சென்னை_இராயபுரம்_ஹசரத்-குணங்குடி-மஸ்தான்-சாகிப்_தர்கா-0002.jpg

TVA_TEM_000343/TVA_TEM_000343_சென்னை_இராயபுரம்_ஹசரத்-குணங்குடி-மஸ்தான்-சாகிப்_தர்கா-0003.jpg

TVA_TEM_000343/TVA_TEM_000343_சென்னை_இராயபுரம்_ஹசரத்-குணங்குடி-மஸ்தான்-சாகிப்_தர்கா-0004.jpg